Ad

script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8802015166507510" crossorigin="anonymous">

Breaking

செவ்வாய், 2 நவம்பர், 2021

சக மனிதர்களுக்கு உதவும் குணம்… பில்கேட்ஸுக்கு மகள் பிறந்தநாள் வாழ்த்து!



பில்கேட்ஸின் பிறந்தநாளையொட்டி, அவரது மகள் ஜெனிஃபர் பில்கேட்ஸ் தன் தந்தைக்கு உணர்வுப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் நிறுவனருமான பில்கேட்ஸின் 66 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவரது மகள் ஜெனிஃபர் பில்கேட்ஸ் தனது தந்தைக்கு உணர்வுப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

‘பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. எல்லையில்லா ஆர்வம், நிலையான ஆய்வு, சக மனிதர்களுக்கு உதவும் குணம் என உங்களின் உதாரணத்தில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு இருப்பதை எண்ணி பெருமையடைகிறேன். வரும் ஆண்டுகளில் நீங்கள் என்ன கற்றுத்தரப் போகிறீர்கள் என்பதைப் பற்றி கேட்க உற்சாகமாக இருக்கிறேன்.

சமீபத்திய எங்களது தொழிற்சங்கம் மற்றும் கனவு தினத்திற்கான உங்கள் ஆதரவிற்கு நன்றி. இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.- source: dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages